கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது


கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
x

கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள இந்திராநகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). சுமை தூக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று அய்யப்பன் பள்ளப்பட்டி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தமிழரசன் (25) உள்பட 3 பேர் அய்யப்பனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டைபையில் இருந்த ரூ.300-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யப்பன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மற்ற 2 பேைரயும் தேடி வருகின்றனர்.



Related Tags :
Next Story