கோச்சடை முத்தையா சுவாமி கோவில் திருவிழா


கோச்சடை முத்தையா சுவாமி கோவில் திருவிழா
x

பெரியகுளம் அருகே கோச்சடை முத்தையா சுவாமி கோவில் திருவிழா நடந்தது

தேனி

பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியில் கோச்சடை முத்தையா சுவாமி, பொன்னழகு சுவாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சருத்துப்பட்டி, பெரியகுளம், அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ேமலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story