மழை வேண்டி கொடும்பாவி எரிப்பு
திசையன்விளை அருகே மழை வேண்டி கொடும்பாவி எரிக்கப்பட்டது.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் நல்லநீர் உப்புநீராக மாறி உள்ளது. நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. தென்னை, பனைமரங்கள் தண்ணீர் இன்றி பட்டுபோய்விட்டது. கோடை மழையும் பெய்யவில்லை. இதனால் மழை வேண்டி திசையன்விளை அருகே காரிகோவில் கிராமத்தில் நேற்று கொடும்பாவி கட்டி அதனை வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக புறப்பட்டனர். வீடுவீடாக சென்று தர்மம் எடுத்து, 'கொட்டும் மழையே பொழிந்துவா, கொடும்பாவியே ஒழிந்துபோ' என்று கோஷமிட்டு அங்குள்ள கடற்கரையில் வைத்து கொடும்பாவியை தீயிட்டு எரித்தனர். பின்னர் தர்மம் எடுத்த அரிசியில் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story