கொடுமுடி காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் வெள்ள அபாய ஒத்திகை நிகழ்ச்சி
கொடுமுடி காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் வெள்ள அபாய ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு
கொடுமுடி
ஈரோடு மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையின் அறிவுறுத்தலின்படி கொடுமுடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் கொடுமுடி காவிரி ஆற்றில் வெள்ள அபாய ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது ஆற்றில் சிக்கியவரை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story