கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வளைகாப்பு விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று ஆடிப்பூர வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து செண்பகவல்லி அம்மனுக்கு கர்ப்பிணிப் பெண் போல அலங்காரம் செய்து, வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள் மற்றும் மங்களப் பொருட்கள் படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடந்தது.
விழாவில் மாவட்ட அறங்காவலர் இந்துமதி கௌதமன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் மகாலட்சுமி கே. சந்திரசேகர், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் திரளான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு பிரசாதம்
விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவ கலை பிரியா மற்றும் கோவில் ஊழியர்கள் மஞ்சள் கயிறு, லட்டு பிரசாதம் வழங்கினர்.
இதேபோன்று கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு முத்து மாரியம்மன் கோவிலிலும், மந்தித்தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி கோவிலிலும் ஆடிப்பூர வளைகாப்பு விழா நேற்று நடந்தது.