கொள்ளிடம் தண்ணீர், வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் புகுந்தது


கொள்ளிடம் தண்ணீர், வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் புகுந்தது
x

கொள்ளிடம் தண்ணீர், வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் புகுந்தது.

அரியலூர்

கொள்ளிடத்தில் வெள்ளம்

அரியலூர் மாவட்டத்தில் குலமாணிக்கம் கிராமத்தில் இருந்து அணைக்கரை வரை கொள்ளிடம் ஆறு 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது. காவிரி ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும்போது, கொள்ளிடத்தில் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த 2005-ம் ஆண்டு 4 லட்சம் கன அடி நீர் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கடந்த மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையில் கடந்த 2 நாட்களாக 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கோவிலில் தண்ணீர் புகுந்தது

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ேகாவிலின் உள் பிரகாரத்திலும், வாசலிலும் நீர் சுவற்றில் இடையே உள்ள துளைகள் போன்றவற்றின் வழியாக தண்ணீர் புகுந்து வருகிறது.

மேலும் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்தால், கோவிலில் மூலவர் சன்னதியிலும் தண்ணீர் புகுந்து விடும். குழாயில் இருந்து தண்ணீர் வருவதுபோல் கோவில் சுவரில் உள்ள ஒரு துளையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

வயல்களை சூழும் அபாயம்

திருமழபாடி வட்டார பகுதியில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் கொள்ளிடம் ஆற்ைற சென்றடைவதற்காக ஒரு மதகு உள்ளது. தற்போது ஆற்றின் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால், அந்த மதகு வழியாக தண்ணீர் புகுந்து மேளக்காரன் குட்டையில் விழுந்து நிரம்பி வருகிறது.

இதே நிலை நீடித்தால் அருகில் உள்ள வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, சூழ்ந்துவிடும் அபாய நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி ஊருக்குள் தண்ணீர் வருவதை தடுக்க, மதகு பகுதியில் வைக்கோல் வைத்து அடைக்க முயன்றும், மணல் மூட்டைகளை போட்டும் வருகின்றனர்.


Next Story