கொம்மடிக்கோட்டை வாலைகுரு சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
கொம்மடிக்கோட்டை வாலைகுரு சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
தட்டார்மடம்:
கொம்மடிக்கோட்டையில் பாலாசேத்திரம் என்று அழைக்கப்படும் வாலைகுரு சுவாமி கோவிலில் நேற்று சந்திரசேகரர் சுவாமி-மனோன்மணி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 4 மணியளவில் சந்திரசேகரர் சுவாமி, மனோன்மணி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பிராகரம் வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டு திருக்கல்யாண சீர்வரிசையுடன் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருச்செந்தூர் விக்னேஷ் பட்டர் குருக்கள் தலைமையில் கணபதி ஹோம பூஜை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு சந்திரசேகரர் சுவாமி, மனோன்மணி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கொம்மடிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் இருந்து எராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.