கொங்கர்பாளையம் வேட்டைச்சாமி கோவில் விழா திரளான பக்தர்கள் தரிசனம்
வேட்டைச்சாமி கோவில் விழா
கொங்கர்பாளையம் வேட்டைச்சாமி கோவில் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
வேட்டைச்சாமி கோவில்
டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் அருகே வாணிப்புத்தூரில் பிரசித்தி பெற்ற வேட்டைச்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு மடப்பள்ளியில் இருந்து வாணிப்புத்தூர் மோதூர் பிரிவில் அமைந்துள்ள வேட்டைச்சாமி கோவிலுக்கு சாமி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சாமி தரிசனம்
பின்னர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 7.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிறகு மாலை 4 மணி அளவில் மடப்பள்ளிக்கு சாமி சென்றடைந்தது.
விழாவில் கே.என்.பாளையம், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், அரக்கன்கோட்டை, பள்ளத்துமேடு, டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.