கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x

கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

சென்னையில் நேற்று முன்தினம் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அமலாக்கத்துறையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு வீடு கட்டுவோர் கூட்டுறவு நல சங்க தலைவர் சாமியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன், கரூர் நகர செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story