கோசனம் கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு
புறக்கணிப்பு
ஈரோடு
நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது கோசனம் ஊராட்சி. இங்கு காந்தி ஜெயந்தியான நேற்று கிராமசபை கூட்டம் நடத்த நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கூட்டம் பகல் 11 மணி அளவில் தொடங்கியது. அப்போது கூட்டத்தை பெரும்பாலான மக்கள் புறக்கணித்தனர். 25 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் போதிய கூட்டம் இல்லாததால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மதியம் 1 மணி அளவில் கூட்டம் தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோசனம் ஊராட்சி செயலாளர் அம்மாசை செய்திருந்தார்.
Related Tags :
Next Story