கோத்தகிரி புளூ மவுண்டன் அணி வெற்றி


கோத்தகிரி புளூ மவுண்டன் அணி வெற்றி
x

கிரிக்கெட் தகுதி சுற்று லீக் போட்டியில் கோத்தகிரி புளூ மவுண்டன் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்து, சி-டிவிஷனில் விளையாட விருப்பம் தெரிவித்த அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி புளூ மவுண்டன் அணி, குன்னூர் வைபர்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புளூ மவுண்டன் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் சதமடித்து 146 ரன்கள் குவித்தார். ராஜு 57 ரன்கள், மகேஷ் 27 ரன்கள் எடுத்தனர்.தொடர்ந்து ஆடிய குன்னூர் வைபர்ஸ் அணி ஆடிய போது, மழை குறுக்கிட்டது. இதனால் 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வைபர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கோத்தகிரி புளூ மவுண்டன் அணி வெற்றி பெற்றது.


Next Story