கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?-  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நிழற்குடை இல்லை

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் பல குக்கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக ஈளாடா கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சுற்றி தனியார் தேயிலை எஸ்டேட்டுகள், கர்சன், பட்டக்கொரை, பாரதி நகர், காந்திநகர், கதகஹட்டி, கதகத்துறை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

இங்கு சுமார் 500- க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த நிழற்குடை பழுதடைந்திருந்த காரணத்தால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. மேலும் புதிதாக நிழற்குடை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 4 மாத காலமாகியும் கூட புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதிதாக கட்டித்தர வேண்டும்

எனவே பொதுமக்கள், பயணிகள், மாணவ, மாணவிகள் மழை மற்றும் வெயிலில் பஸ்சுக்காக சிரமத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஈளாடா பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை மிகவும் மோசமாக காணப்பட்டது. இதனால் அந்த நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. மேலும் விரைவில் நிழற்குடை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித பணிகளையும் தொடங்குவதாக தெரியவில்லை. இதனால் நாங்கள் மழை மற்றும் வெயிலில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே விரைவில் புதிய பேருந்து நிழற்குடையை விரைவில் கட்டித் தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story