இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது குறித்து கோட்டாட்சியர் ஆய்வு
அத்தியூர்-அரியலூர் சாலை விரிவாக்கப்பணிக்காக இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது குறித்து கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்,
சங்கராபுரம்-கடலூர் மாநில சாலையில் சங்கராபுரத்தில் இருந்து அத்தியூர், பகண்டைகூட்டுரோடு, மாடாம்பூண்டி கூட்டுரோடு வழியாக திருக்கோவிலூர் செல்லும் சாலையில் விரிவாக்கப் பணிக்கு அத்தியூர்-அரியலூர் வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. ஆனால் சாலையோரத்தில் உள்ள 4 மின்மாற்றிகள், 11 மின்கம்பங்கள், புளியமரம், காட்டுவாகை, வேம்பு உள்ளிட்ட 27 மரங்களை அகற்றினால் மட்டுமே அகலப்படுத்த முடியும். இதையொட்டி அகற்றப்பட வேண்டிய சாலையோர மரங்களை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர் அன்பழகன், சாலை ஆய்வாளர் கதிர்வேல், பணியாளர் பத்மநாபன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story