கோத்தகிரி அரசு பள்ளியில் கலைத்திருவிழா
கோத்தகிரி அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது.
கோத்தகிரி,
ேகாத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 25 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 38 பிரிவுகளில் போட்டிகளும், 9 மற்றும் 10-ம் மாணவிகளுக்கு 81 பிரிவுகளில் போட்டிகளும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 88 பிரிவுகளில் போட்டியும் என 3 பிரிவுகளாக நடைபெற்றன. மேலும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவில் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதில் தகுதி பெறுபவர்கள், மாநில அளவில் ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்துகொள்வார்கள்.
இதில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி கல்வித்துறை மூலம் வெளிநாடு சுற்றுலா செல்ல உள்ளனர்.