கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தில் 'மண்டெ தண்டு' திருவிழா கொண்டாட்டம்


கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தில் மண்டெ தண்டு திருவிழா கொண்டாட்டம்
x

கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தில் ‘மண்டெ தண்டு' திருவிழா கொண்டாடப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகு சமுதாய மக்களின் குலதெய்வமான ஹிரியோடையா திருவிழா கோத்தகிரி பொரங்காடு சீமைக்குட்பட்ட தாந்தநாடு தொட்டூரில் நடைபெற்றது. கிராமத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பனகுடியில் (வனக்கோவில்) பக்தர்கள் காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

கிராம கோவிலில் 'மண்டெ தண்டு' திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியூர்களிலிருந்து தாந்தநாடு தொட்டூருக்கு திருமணம் செய்து வந்து முதல் ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண்கள், தங்களது பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் கலாசார உடை அணிந்து, தங்கள் குழந்தைகளுடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் 14 ஆண் குழந்தைகள் மண்டெ தண்டு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த விழாவில் தாந்த நாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story