கோடியக்கரை கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள்


கோடியக்கரை கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள்
x

கோடியக்கரை கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள்

நாகப்பட்டினம்

படகு பழுதானதால் கோடியக்கரை கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர்.

நாகை மீனவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்து கோடியக்கரை உள்ளது. இங்கு தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடிக்க சென்றனர்.

படகு பழுதால் தத்தளிப்பு

கடந்த 4-ந்தேதி மாலை இவர்கள் கடலில் தங்கி மீன் பிடித்தபோது, திடீரென படகு பழுதாகி நின்றது. இதனால் மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்தனர்.

இதுகுறித்து கடலோர காவல் படையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நேற்று காலை கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து படகு பழுதாகி கடலில் தத்தளித்த படகு ஓட்டுனர் முகிலன், கவுதமன் உள்ளிட்ட 5 மீனவர்களையும், படகையும் மீட்டு நாகை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் படகு உரிமையாளர் அண்ணாமலையிடம் படகையும், மீனவர்களையும் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர்.


Next Story