கவுண்டம்பட்டி சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா:தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
கவுண்டம்பட்டி சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம்
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக சரபங்கா நதிக்கரையில் இருந்து கோவிலுக்கு பூங்கரகங்களை எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் அலகு குத்தியும் அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story