மருதவனம் காளியம்மன் கோவில் பால்குட திருவிழா


மருதவனம் காளியம்மன் கோவில் பால்குட திருவிழா
x

மருதவனம் காளியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் தாளையடி கோட்டை கிராமத்தில் உள்ள மருதவனம் மகாகாளியம்மன் கோவிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். முதலில் தாளையடிகோட்டை கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அலகுகுத்தியும், ரதம் இழுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், பால்குடங்களை எடுத்தும் தாளையாடிகோட்டை பகுதி முழுவதும் வலம்வந்து நயினார்கோவில் நகர் பகுதியில் அமைந்துள்ள மருதவனம் காளியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நயினார் கோவில் பகுதியில் உள்ள மக்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி மருதவனம் காளி அம்மனுக்கு அபிஷேகம் செய்து அம்மனுக்கு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானவிழா நடைபெற்றது.


Next Story