மொடக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3½ கோடி நிலம் மீட்பு
மொடக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3½ கோடி நிலம் மீட்பு
ஈரோடு
ஈரோடு
மொடக்குறிச்சி குளூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் 13 சென்ட் புஞ்சை நிலம் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதுதொடர்பான வழக்கு ஈரோடு இணை ஆணையாளர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து இந்துசமய அறிநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி உத்தரவிற்கிணங்க, ஈரோடு உதவி ஆணையாளர் அன்னக்கொடியால் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் ஆகும். இதில் கோவில் தர்க்கார் ராஜாகோபால், சரக ஆய்வாளர் தேன்மொழி, கோவில் பணியாளர்கள் ராதாகிருஷ்ணன், சுந்தரராஜ், நல்லசாமி, ராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story