ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோடைகால விடுமுறையின் கடைசி நாளில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
கோடைகால விடுமுறையின் கடைசி நாளில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
கோடை விடுமுறை
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கோடைகால விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா இடங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோடைகால விடுமுறையின் கடைசி நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.
இலவச தரிசன பாதை
இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் உள்ள தீர்த்த கடலில் புனித நீராடவும் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். தொடர்ந்து சாமியை தரிசனம் செய்யவும் பிரகாரத்தில் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சாலை பகுதியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.