கோபி கோவில்களில் ஆனி திருமஞ்சன விழா


கோபி கோவில்களில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.

ஈரோடு

ஈரோடு

கோபி கோவில்களில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.

பச்சைமலை சுப்ரமணியசாமி

கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணியளவில் யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சிவகாமி அம்மாள் நடராஜருக்கு பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், மகாதீப ஆராதனையும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது மேலும் கோபி அருகே உள்ள பாரியூர் அமர பணீஸ்வரர் கோவிலிலும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. சிவகாமி அம்பாள் நடராஜருக்கு பல்வேறு அபிஷேகங்களும் நடைபெற்றன. அங்கும் அன்னதானம் நடந்தது. கோபி, பாரியூர், வெள்ளாளபாளையம், நாய்க்கன் காடு, மொடச்சூர், கொளப்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டுச் சென்றனர்.

விஸ்வேஸ்வரர் கோவில்

கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி நடராஜர், சிவகாமி சுந்தரிக்கு பால், தயிர், இளநீர், எலுமிச்சம்பழம், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மகா தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் சாமியும், அம்பாளும் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்கள். பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்திருந்தார்கள். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story