கோவில் கும்பாபிஷேக விழா


கோவில் கும்பாபிஷேக விழா
x

மண்டல உடைய அய்யனார்,சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் அருகே காச்சான் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.தீர்த்தம் கொண்டு வருதல், யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சாரியார்கள் தீர்த்த குடம் சுமக்க கடம் புறப்பாடாகி கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அய்யனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். அன்னதான ஏற்பாட்டினை ஒன்றிய கவுன்சிலர் மணிமன்னன் செய்திருந்தார்.


Next Story