ஈரோடு முனிசிபல்காலனி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்
ஈரோடு முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஈரோடு
ஈரோடு முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம்
ஈரோடு முனிசிபல் காலனியில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 5-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை, யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. நேற்று காலையில் 4-ம் கால யாக பூஜை நடந்தது.
அதன்பிறகு யாகசாலையில் இருந்து கலசங்கள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு கோவிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
சிறப்பு அலங்காரம்
விழாவில் கோவிலை சுற்றிலும் திரளான பக்தர்கள் நின்றிருந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் விநாயகரின் திரு வீதிஉலா நடந்தது.