கொடுமுடி, கோபியில் நவராத்திரி கொலு அமைப்பு
கொடுமுடி, கோபியில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
கொடுமுடி, கோபியில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.
கொடுமுடி
புரட்டாசி மகாளய அமாவாசையில் இருந்து விஜயதசமி வரைக்கும் உள்ள 10 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து கொடுமுடி ஆதீன மடத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. கொடுமுடி ஆதீனம் தண்டபாணி குருக்கள் கொலுவுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து 9 நாட்கள் பூஜை நடைபெற உள்ளது. கவுந்தரம் தண்டபாணி குருக்கள் பிரசாதம் வழங்குகிறார்.
கோபி
இதேபோல் கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்து மாரியம்மன் கோவிலில் 9 படிகள் வைத்து கொலு அமைக்கப்பட்டுள்ளது. கொலு பொம்மைகளுக்கு வண்ண மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொலுவை பார்த்து செல்கிறார்கள். அவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story