ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

புனித நீர்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது. விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவ்வாறு கடலில் நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராட குவிந்தனர்.

மேலும் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் மற்றும் கிழக்கு வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

வடமாநில பக்தர்கள்

அதிலும் குறிப்பாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த சில நாட்களாக தமிழக பக்தர்களை விட வட மாநில பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதுடன் இவ்வாறு கோவிலுக்கு வரும் வடமாநில பக்தர்கள் கோவிலின் சாமி மற்றும் அம்மன் சன்னதி கொடிமரம் முன்பும் கையில் தீப விளக்குகளை ஏற்றி தரிசனம் செய்கின்றனர்.

இதேபோல் புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை மற்றும் சாலை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.


Next Story