ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் அன்னாபிஷேகம்


ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் அன்னாபிஷேகம்
x

ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் சாமிக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி சாமி, அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் உபயமாக வழங்கிய காய்கறிகள், அரிசியை கொண்டு சமையல் செய்து உச்சிக்கால வேளையில் சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்படவும் பருவமழை சரியான முறையில் பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடந்து தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ஆலய குருக்கள் ரவி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story