கவுந்தப்பாடி குண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா- ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
கவுந்தப்பாடி குண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி குண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
குண்டம் இறங்கும் நிகழ்ச்சி
கவுந்தப்பாடியில் பழமையான குண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த 7-ந் தேதி முனியப்பசாமிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 8-ந் தேதி இரவு பூச்சாட்டப்பட்டது. 10-ந் தேதி காலை சந்தனகாப்பும், இரவு வாஸ்துசாந்தியும் நடந்தது. 20-ந்தேதி கொடியேற்றப்பட்டது. 21-ந் தேதி காலை தீர்த்தம் எடுத்து வருதலும், முப்பாடு அழைத்தலும் நடந்தது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு மேல் குண்டம் திறப்பும், இரவு 1.30 மணிக்கு மேல் அம்மை அழைத்தலும் நடைபெற்றது. நேற்று காலை 7.30 மணிக்கு மேல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தீ மிதித்து நேர்த்திக்கடன்
இதில் கவுந்தப்பாடி, சலங்கபாளையம், கவுண்டம்பாளையம், மின்னவேட்டுவம்பாளையம், அப்பன்வலசு, மாணிக்காவலசு, பெரியாக்கவுண்டன்வலசு உள்பட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தொடர்ந்து பொங்கல் வைத்தலும், மாவிளக்கு எடுத்து வருதலும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் என்.கிருஷ்ணசாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.