சிவகிரி செட்டிதோட்டம்புதூரில் அமுத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; இன்று நடைபெறுகிறது


சிவகிரி செட்டிதோட்டம்புதூரில் அமுத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; இன்று நடைபெறுகிறது
x

சிவகிரி செட்டிதோட்டம்புதூரில் உள்ள அமுத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி செட்டிதோட்டம்புதூரில் உள்ள அமுத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

அமுத விநாயகர்

சிவகிரி அருகே செட்டிதோட்டம்புதூரில் பழமையான அமுத விநாயகர் கோவில் உள்ளது. புனரமைப்பு பணிகள் நடைபெற்றதால் இந்த கோவிலில் இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று காலை 10.30 மணியளவில் பக்தர்கள் ஊஞ்சலூர் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்தார்கள். அதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் விழா தொடங்கியது.

பின்னர் வாஸ்துசாந்தி, முதல்காலயாக பூஜை, மண்டபார்ச்சனை, பூர்ணாகுதி செய்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகம்

இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் 2-ம் கால யாக பூஜை விநாயகர் வழிபாடு, தீபாராதனை செய்யப்படுகிறது.

காலை 9 மணிக்கு மேல் சிவகிரி ஆதீனம் 75-வது குலகுரு சன்னிதானம் சிவசமய பண்டித குருசாமிகள் தலைமையில் அமுத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதில் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்துகொள்ள உள்ளார்கள். காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.


Next Story