சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு

சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோபி மாதேஸ்வரன்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோபி மாதேஸ்வரன் கோவிலில் சாமிக்கும், நந்திக்கும் பால், தயிர், இளநீர், எலுமிச்சம்பழம், திருநீறு, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் கோபி கூகலூரில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் பிரகாரத்தில் சாமி உலா வந்தார்.

ஊஞ்சலூர் நாகேஸ்வரர்

ஊஞ்சலூர் காவிரிக்கரையில் அமைந்துள்ள நாகேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவருக்கும், அமிர்தவள்ளி தாயாருக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்கள்.

கொளாநல்லி பாம்பலங்காரேஸ்வரர், பழனிக்கவுண்டன் பாளையம் பழனியாண்டவர் கோவிலிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


Next Story