மன்னாதம்பாளையம் குலவிளக்கு அம்மன் கோவிலில் தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
நஞ்சைகாளமங்கலம் மன்னாதம்பாளையம் குலவிளக்கு அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சோலார்
நஞ்சைகாளமங்கலம் மன்னாதம்பாளையம் குலவிளக்கு அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவீதி உலா
மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சைகாளமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மன்னாதம்பாளையம் காவிரிக்கரை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குலவிளக்கு அம்மன் கோவில்கள், மத்திய புரீஸ்வரர் சாமி, கல்யாண வரதராஜ பெருமாள் சாமி கோவில்கள் உள்ளன. இக்கோவில்களின் திருவிழா கடந்த 28-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரங்கள் செய்யப்பட்டு் பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர் கிராம சாந்தி, கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், அம்மன் திரு வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேரோட்டம்
கடந்த 4-ந் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் முப்பாட்டு மாவிளக்கு நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் அம்மன் குதிரை வாகனத்தில் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் குலவிளக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூதகவாளம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதனையடுத்து நேற்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். மாலை 4.30 மணி அளவில் தேர் நிலை சேர்ந்தது. தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணி அளவில் வாண வேடிக்கை மற்றும் தெப்ப உற்சவம் நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) காலை 6 மணி அளவில் அம்மன் கோவிலுக்கு செல்லுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் நடக்கும் சிறப்பு மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.