கவுந்தப்பாடி அருகே சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- நாளை நடக்கிறது
கவுந்தப்பாடி அருகே சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- நாளை நடக்கிறது
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே உள்ள ஆவரங்காட்டூர் சக்திமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 31-ந் தேதி அன்று காலை யாகசாலை அமைத்தலுடன் தொடங்கியது. 6-ந் தேதி காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜையும், மாலையில் விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, ரக்க்ஷாபந்தனம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை நாட்டிய குதிரை ஆட்டத்துடன் பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டது.
நேற்று மாலை 4 மணி அளவில் முளைப்பாலிகை மற்றும் கூடைகளில் சீர்வரிசை எடுத்து வருதலும், முதல் கால யாகபூஜையும் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி அளவில் 2-ம் கால யாக பூஜையும், பகல் 11 மணிக்கு கோபுர கலசம் பிரதிஷ்டை மற்றும் கண் திறத்தலும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் 3-ம் கால யாக பூஜையும், யந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடைபெறுகிறது.
நாளை (திங்கட்கிழமை) அன்று அதிகாலை 4.30 மணி அளவில் 4-ம் கால யாகபூஜையும் நடக்கிறது.
இதையடுத்து அதிகாலை 5.30 மணி அளவில் சக்தி விநாயகர், சக்திமாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.