சோழீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி


சோழீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி
x

சோழீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையோரம் மிகவும் பிரசித்தி பெற்ற சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி, நேற்று கோவிலில் சிவனடியார்கள் பங்கேற்ற மாணிக்க வாசகர் அருளிய திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம் முற்றோதுதல் நிகழ்த்தினர். பின்னர் மதியம் 1 மணிக்கு மாதேஸ்வர பூஜை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story