சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது


சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது
x

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 19-ந் தேதி குண்டம் விழாவுக்காக பூச்சாட்டப்பட்டது. 20-ந் தேதி கோவில் முன்பு பெரிய கம்பம் நடப்பட்டது. அன்று முதல் நாள்தோறும் இரவு கம்பம் ஆட்டம் நடைபெற்றது. கடந்த 3-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வாணவேடிக்கையுடன் கம்பம் பிடுங்கும் விழா நடந்தது. ஏராளமான இளைஞர்கள் கம்பத்தை அசைத்து அசைத்து பிடுங்கினார்கள். பின்னர் தோளில் வைத்து சுமந்து கொண்டு பவானி ஆற்றில் கொண்டு சென்று விட்டனர்.

நேற்று கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. வருகிற 11-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.


Next Story