பாலமரத்து கருப்பராயன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம்


பாலமரத்து கருப்பராயன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம்
x
திருப்பூர்


ஊத்துக்குளி வட்டம் செங்கப்பள்ளி பூசாரிபாளையம் விநாயகர், பாலமரத்துக்கருப்பராயன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாலமரத்துகருப்பராயன் சாமி கோவில்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் செங்கப்பள்ளியில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் பூசாரிபாளையம் பகுதியில் சாலை ஓரம் காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் பாலமரத்துக்கருப்பராயசாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். சில வருடங்களுக்கு முன்பு இக்கோவில் பாலாலயம் செய்து, கொடுமணல் தங்கம்மன் கோவில் செயலாளர் ராமசாமி கவுண்டர் தலைமையில் பாலமரத்துக்கருப்பராயன் சாமிக்கு கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிலை விமானம், சாளரகோபுரம், கன்னிமார் ஆலயம், விநாயகர் ஆலயம், திருமதிற்சுவர் என கல்ஹார திருப்பணிகளும் வர்ண கலாப திருப்பணிகளும் நிறைவடைந்து நேற்று கும்பாபிஷேகம் தேவசிவ ஆகம முறைப்படி நடைபெற்றது.

முளைப்பாரி ஊர்வலம்

முன்னதாக கடந்த 23-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ, ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 24-ந்தேதி மதியம் செங்கப்பள்ளி அழகு நாச்சி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் முளைப்பாரி அதிர்வெட்டு முழங்க வாத்தியகோஷங்களுடன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று முன் தினம் காலை விஷேசஸந்தி, 2-ம் கால யாக பூஜை, வேதபாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மாலை கோபுர கலசம் வைத்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலை 3-ம் பாலமரத்து கருப்பராயன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம்கால யாக பூஜை, திருமுறை பாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும் இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று காலை 4-ம் கால யாக பூஜைகளும், மகாதீபா ராதனையும் அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு மேல் பாலமரத்துக் கருப்பராயசாமி விமான கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விநாயகர், பாலமரத்துக்கருப்பராயசாமி, கன்னிமார் சாமி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து விபூதி தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் விழாக்குழுவின் சார்பாக வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பூசாரிபாளையம் ஊர் பொதுமக்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊத்துக்குளி போலீசாரும் செய்திருந்தனர்.


Next Story