ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1½ கோடி கோவில் நிலம் மீட்பு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நாட்டார் மங்கலம் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 10.63 ஏக்கர் புஞ்சை நிலம் தட்டார வலசு கிராமத்தில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் குமரதுரை உத்தரவின் பேரில் அதிகாரிகள் அந்த நிலத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து நிலத்தை ஒப்படைத்தனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ், தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர் மற்றும் செயல் அதிகாரி, கோவில் பணியாளர் ஆகியோர் முன்னிலையில் 10.63 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1½ கோடியாகும்.
Next Story