கருப்பராய சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
திருப்பூர் 15 வேலம்பாளையம், தண்ணீர்பந்தல் காலனி விநாயகர், கன்னிமார், பாலமுருகன், கருப்பராய சுவாமி, ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 9-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து கடந்த 47 நாட்களாக தினமும் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று 48-வது நாளுடன் மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சாமிகளுக்கு ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும் நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். நேற்று மாலை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர்.