நாகாத்தம்மன் ேகாவிலில் நகை,உண்டியல் பணம் திருட்டு


நாகாத்தம்மன் ேகாவிலில் நகை,உண்டியல் பணம் திருட்டு
x
திருப்பூர்


திருப்பூர் விஜயாபுரம் அருகே உள்ள புற்றுக்கண் நாகாத்தம்மன் கோவிலில் அம்மன் சிலையில் இருந்த தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் இருமுடி பைகளுக்கு தீ வைத்து விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தீ வைத்து எரிப்பு

திருப்பூர் காங்கயம் ரோடு விஜயாபுரத்தில் இருந்துஅமராவதி பாளையம் செல்லும் சாலையில் யாசின்பாபுநகர் காட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் புற்றுக்கண் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அப்பகுதியைச் சேர்ந்த 50 பெண்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல இருமுடி கட்டி தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பூஜை முடிந்து வழக்கம் போல் கோவிலை பூசாரி நாகராஜன் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை 5 மணியளவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கோவில் கதவு இரும்பு கம்பியால் நெம்பி திறக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த இருமுடி பைகள் தீயில் எரிந்த நிலையில் இருந்தது. அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மன் சிலையில் அலங்காரம் கலைக்கப்பட்டு இருந்தது. கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டிருந்தது.

நகை-பணம் திருட்டு

மேலும் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 4 கிராம் எடையுள்ள 4 தாலிப்பொட்டு தங்கம், 20 கிராம் எடையுள்ள ஐம்பொன்-2 ஆகியவை திருட்டு போயிருந்தது. இது குறித்து பூசாரி நாகராஜன் நல்லூர் போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு உதவி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், உதவி போலீஸ் கமிஷனர் நந்தினி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிநாகாத்தம்மன் ேகாவிலில் நகை,உண்டியல் பணம் திருட்டுநாகாத்தம்மன் ேகாவிலில் நகை,உண்டியல் பணம் திருட்டுகளை வைத்து போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இதே கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி திருட்டு சம்பவம் நடந்தது. ஆனால் இது வரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில்களில் தொடர் திருட்டு

திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநகர் மாவட்ட துணைத்தலைவர் பிடெக்ஸ்.பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் கூறுகையில் "காங்கயம் வட்டமலை கருப்பராயன் கோவில், மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் செங்கோடம்பாளையம் கோவில், திருப்பூர் வெங்கமேடு பகுதியில் கோவிலில் பூசாரி கொலை என கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொடர்ந்து 11 கோவில்களில் பல்ேவறு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக போலீசார் கோவில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.


Next Story