கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா
ஊத்துக்குளி
திருப்பூர் காளிபாளையம் கிராமம் கிழக்கு சீரங்கபாளையம் ஸ்ரீகோரங்காட்டு கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.
கருப்பராயன் கோவில்
திருப்பூர் மாவட்டம்அவினாசி வட்டம் காளிபாளையம் கிராமம் கிழக்கு சீராம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோரங்காட்டு கருப்பராயன் கோவில்கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி இங்குள்ள ஆதிசெல்வ விநாயகர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி உடனமர், ஸ்ரீ அரங்கநாதப்பெருமாள் கோவில், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசப்தகன்னிமார்,ஸ்ரீகருப்பராய சுவாமி கோவில்கள் புதுப்பித்து,வர்ணம் பூசியும் கோபுரகலசங்களை புதுப்பித்தும் உள்ளது. மேலும் யாக சாலைகள் அமைத்து கோவிலி்ல் உள்ள தெய்வங்களுக்கு புகழ் பெற்ற திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழா கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிரவையாதீனம் கவுமார மடாலயம் சரவணம்பட்டி குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரி 57-வது ஜகத்குரு குரு ஸ்ரீமத் ராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள், அவினாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கவுந்தப்பாடி ஓம் வெற்றி வேலாயுதசுவாமி சித்தர் குடில் முருகன் அருள்அபி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) யாகசாலை பூஜை, கோபுர கலசங்கள் வைத்தல் நடைபெறுகிறது.
கும்பாபிேஷக விழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் ஸ்ரீஆதிசெல்வ விநாயகர், அரங்கநாத பெருமாள் விமானம், மூலவர், விநாயகர், கோரங்காட்டு சப்தகன்னிமார், கருப்பராயன் சுவாமிகள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கண்ணன் குல பங்காளிகள், ஸ்ரீ கோரங்காட்டு கருப்பராயன் கோவில் அறக்கட்டளை திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.