உச்சிமாரியம்மன் கோவில் திருவிழா
சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற உச்சிமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. உச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் சக்தி பூஜை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.கடந்த 31-ந்தேதி சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து திருமூர்த்தி மலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு வளர்த்துக் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சியும் இரவு பொதுமக்கள் பரிவட்டத்துடன் கோவிலுக்கு வருகை தந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், மாகாளியம்மனுக்கு சக்தி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் இன்று(புதன்கிழமை) காலை அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் மாலை 5 மணிக்கு வாண வேடிக்கையும் நடைபெறுகிறது.இரவு கம்பம் பிடுங்கி கங்கையில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் அபிஷேகம், பூஜையும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி, எஸ் அம்மாபட்டி, பொட்டிநாயக்கனூர், ரத்தினம்மாள் நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.