கோவிலிபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட முகாம்
கோவிலிபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சிவந்திபட்டி கிராமத்தில் நடந்தது. திட்ட அதிகாரி காசிராஜன் தலைமையில் அந்த கிராமத்தில் மாணவர்கள் முகாமிட்டு தூய்மை பணி, ஆளுமை திறன் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மழை நீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாம் நிறைவிழாவிற்கு சிவந்திபட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆதிராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் கலந்து கொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். மாணவர் மிதின் கார்த்திக் வரவேற்றுப் பேசினார். மாணவர் சக்தி மயில் நன்றி கூறினார். முகாமில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story