காடேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணி


காடேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணி
x
திருப்பூர்


காங்கயம் அருகே காடேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணி நடைபெற்றது.

கோவில் நிலங்கள்

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்டப்பட்ட நிலங்களில் தனியார் மீண்டும் அத்து மீறாதவாறு அளவீடு செய்து எல்லை கற்கள் நடவு செய்யப்படுகிறது. இப்படி வரலாற்று சிறப்பு மிக்க கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு எல்லைகள் நடப்பட்டுள்ளன.

அந்த வகையில் காங்கயம் தாலுகா வடசின்னாரிபாளையம் ஊராட்சியில் பழமையான காடையூர் காடேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளர்ளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசு உத்தரவுப்படி இவற்றை மீட்க நிலங்களை கண்டறிந்து அளவீடு செய்து கற்கள் நடும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

எல்லை கற்கள்

திருப்பூர் தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) சு.மகேஸ்வரன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை நில அளவையாளர், செயல் அலுவலர் அடங்கிய குழுவினர் முதல்கட்டமாக வடசின்னாரிபாளையம் கிராம பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள காடையூர் காடேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான 7.41 ஏக்கர் நிலத்தில் அளவீடு செய்து எல்லை கற்களை நட்டுள்ளனர். இதேபோல் கோவிலுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் விரைவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story