கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிலையத்தை ஆராய்ச்சி நிலைய தலைவரும், பேராசிரியருமான கோ. பாஸ்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பயிர் மரபியல் இணை பேராசிரியர் ஆனந்தி விதை சுத்திகரித்து சந்தைப்படுத்துதல், தரமான விதைகளை பயிரிட்டு அமோக விளைச்சல் பெற்று லாபமடைதல் பற்றி பேசினார்.
இங்கு விவசாயிகள் சோளம், பயறு வகைகளை கொண்டு வந்து விதைகளை சுத்திகரித்து சந்தைப் படுத்துவதற்கும், தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெற்று பயனடையவும் இந்த விதை சுத்திகரிப்பு நிலையத்தை பயன்படுத்திக்கெள்ள வேண்டும். மேல்விவரங்களுக்கு 04632-220533 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story