கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 வேளாண்மை துறை மாணவர்களுக்கு 10 நாள்கள் நடைபெற்ற உள்ளுறை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் உதவி பேராசிரியர்கள் மனோகர், சஞ்சீவ்குமார், குரு, சோலைச்சாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேற்பார்வையாளர் தாமரைக்கண்ணன் களப்பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளியின் நாட்டு நல பணி திட்ட அலுவலர் சுப்பாராஜூ நன்றி கூறினார்.
Related Tags :
Next Story