கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிஅ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி(மேற்கு):
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், கருப்பசாமி, பேரூராட்சி செயலாளர்கள் முத்துராஜ், வாசமுத்து, ராமசாமி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், இணை செயலாளர் நீலகண்டன், நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோவில்பட்டி தொகுதியில் உள்ள 286 பூத் கமிட்டிக்கு 19 உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணியினர் 25 பேர், இளைஞர், இளம் பெண்கள் பாசறை 25 பேரை சேர்க்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான படிவங்களையும், நோட்டு புத்தகங்களையும் நிர்வாகிகளிடம் மாவட்ட செயலாளர் வழங்கினார்.