கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை
x

இலங்கைக்கு யூரியா அனுப்பும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நேற்று விவசாய சங்கத்தினர் கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

இலங்கைக்கு யூரியா அனுப்பும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நேற்று விவசாய சங்கத்தினர் கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்புதேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்தில் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், தேசிய விவசாய சங்க நகர தலைவர் ராமசாமி, கிளைத் தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜாவிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அரசு உத்தரவுப்படி கூலி

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பஞ்சாயத்தில் இளையரச னேந்தல், லட்சுமியம்மாள்புரம், கொடைப்பாறை, அய்யம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த 1,286 பேர் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் 55 வயதுக்கு மேற்பட்டோர் 75 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு தினமும் ரூ.150 மட்டுமே கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அரசு உத்தரவுப்படி இவர்களுக்கு ரூ.281 ஐ முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைக்கு யூரியா...

இலங்கையில் உள்ள விவசாயத்தை முன்னேற்று வதற்கும், விளைபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தியாவில் இருந்து 60 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப் பட்டுள்ளது. அடுத்து ராபி பருவம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு ராபி பருவத்தின் போது இங்கு யூரியா தட்டுப்பாடு நிலவியதால் விவசாயிகள் திண்டாடினர். யூரியா போதிய இருப்பு இல்லாமல் உள்நாட்டில் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது, இந்திய விவசாயிகளுக்கு கடும் துன்பத்தை விளைவிப்பதாக உள்ளது. எனவே இலங்கைக்கு யூரியா அனுப்பும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், என கூறியிருந்தனர்.


Next Story