கோவில்பட்டி நகரசபை கூட்டம்


கோவில்பட்டி நகரசபை கூட்டம்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நகரசபை கூட்டம் அதன் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை சாதாரண கூட்டமும், தொடர்ந்து அவசர கூட்டமும் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் தங்களது வார்டுகளில் குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். அவற்றுக்கு நகரசபை தலைவர் பதில் அளித்தார். சாதாரண கூட்டத்தில் 6 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 12 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


Next Story