கோவில்பட்டி கல்வி மாவட்ட தடகள போட்டி:கம்மவார் பெண்கள் பள்ளி சாம்பியன்


கோவில்பட்டி கல்வி மாவட்ட தடகள போட்டி:கம்மவார் பெண்கள் பள்ளி சாம்பியன்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கல்வி மாவட்ட தடகள போட்டியில் கம்மவார் பெண்கள் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கே. ஆர். நகர் நேஷனல் இன்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் கல்வி மாவட்ட அளவில் 14 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள மற்றும் குழுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கோ-கோ, கபடி, பூப்பந்து போட்டியில் முதலிடமும், 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் உயரம் தாண்டுதலில் மாணவி ஜோஸ்லின் ஹெரிஷா முதலிடமும், மாணவி அர்ச்சனா 1,500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவி நிவேதா குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் முதலிடமும், மாணவி விந்தியா 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 4×400 மீட்டர் ஓட்டத்தில் மாணவிகள் முதலிடமும், 17 வயதுக்கு உட் பட்டோர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் அர்ச்சனா முதலிடமும், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் மாணவி நிவேதா முதலிடமும் பெற்றனர். போட்டியில் 94 புள்ளிகள் எடுத்து கம்மவார் பெண்கள் மேல்நிலை பள்ளி அணி சாம்பியன் கேடயத்தை வென்றது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைவர் கதிர்வேல் மற்றும் பள்ளி குழு உறுப்பினர் ஆழ்வார் சாமி, தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story