கோவில்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கோவில்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகர், காட்டுநாயக்கன் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன்- மாரியம்மன், சக்தி விநாயகர், கருப்பசாமி, வைரவ சாமி, முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.40 மணிக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காலை 11 மணியளவில் அன்னதானம் தொடங்கப்பட்டது. அன்னதானத்தை சமுதாய தலைவர் தங்கம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க துணைத் தலைவர் ராஜேஷ் குமார், செயலாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் கார்த்தி, தணிக்கையாளர் மாரிமுத்து, பொருளாளர் வேலு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story