கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர்:
கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மின்கம்பங்கள் மாற்றுதல்
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரிசெய்தல் போன்ற பணிகள் இன்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது.
குலேசேகரன்பட்டினம்
எனவே, வீரபாண்டியன்பட்டினம், அன்னை தெரெசாநகர், பாத்திமாநகர், சங்கிவிளை, குருநாதபுரம், மருத்துவர் தெரு, காட்டுதைக்கா தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு, சொக்கப்பளங்கரை, வாலசுப்பிரமணியபுரம், மேலசாத்தான்குளம், மீன்கடைத் தெரு, நாசரேத் ரோடு, காமராஜ் நகர், கொம்பன்குளம், மீரான்குளம், ஆசிர்வாதபுரம், பிள்ளையான்மனை, செம்பூர், ஆதிநாதபுரம், எழுவரைமுக்கி, தோப்பூர், ஏக்கர்காடு, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, உதிரமாடன்குடியிருப்பு, செம்புலிங்கபுரம், புத்தன்தருவை, அதிசயபுரம், ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி
இதேபோன்று கோவில்பட்டி பகுதியில் பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் இன்று நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வேலாயுத புரம் 2-வது தெரு பகுதிக்கும், சிட்கோ உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் எட்டையாபுரம் ரோடு, சண்முகா தியேட்டர் முதல் கால்நடை மருத்துவமனை வரை உள்ள பகுதிகளுக்கும், சுப்பிரமணிய புரம் பகுதிகளுக்கும், விஜயாபுரி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பாண்டவர் மங்கலம், சண்முக சிகாமணி நகர், சாய் சிட்டி, ராஜிவ் நகர் 4,5,6-வது தெரு பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.