கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி


கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகத்தில்   தேசிய கொடி ஏற்றும்   நிகழ்ச்சி
x

கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் கடம்பூர் ராஜூ கூறுகையில், கூட்டணி குறித்து பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ தற்போது வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க.வில் முறையாக தேர்தல் நடத்தி கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளோம். அ.தி.மு.க. அடையாளத்தை பயன்படுத்தினால் ஓ.பி.எஸ்.சுக்கு ஏமாற்றமே மிஞ்சும்' என்றார்.


Next Story